TNPSC Thervupettagam

நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து மற்றும் இந்தியா

October 11 , 2024 7 hrs 0 min 12 0
  • இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபையின் (ICMR) நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு வலையமைப்பு ஆனது 2023 ஆம் ஆண்டிற்கான அதன் ஆண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • 55% நுண்ணுயிர் எதிர்ப்பிகள் நோய்த்தொற்றுக்கான சிகிச்சைக்காக பரிந்துரைக்கப் படவில்லை, மாறாக அவற்றைத் தடுப்பதற்காகப் பரிந்துரைக்கப்படுகின்றன.
  • 2019 ஆம் ஆண்டில் பதிவான சுமார் 1.27 மில்லியன் உலகளாவிய உயிரிழப்புகளுக்கு பாக்டீரிய AMR தான் நேரடி காரணம் என்றும் 4.95 மில்லியன் உயிரிழப்புகளுக்கு வழி வகுத்தது என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
  • AMR திறன் கொண்ட நோய்க்கிருமிகள் 2050 ஆம் ஆண்டிற்குள் 39 மில்லியன் மக்களின் உயிரை பறிக்கக்கூடும் என்று லான்செட் அறிக்கை எச்சரிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்