நுண்ணுயிர் எதிர்ப்புத் திறன் கொண்ட பாக்டீரிய நோய்க் கிருமிகளால் ஏற்படும் தொற்று நோய்களைத் தடுப்பதற்காக வேண்டி தற்போது உருவாக்கப்பட்டு வரும் தடுப்பூசிகளின் மீதான தகவல் பற்றிய முதல் அறிக்கையை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டது.
எதிர்ப்புத் திறன் கொண்ட பாக்டீரியத் தொற்றுகள் ஆண்டிற்குக் கிட்டத்தட்ட 4.95 மில்லியன் உயிரிழப்புகளை ஏற்படுத்துகின்றன.
அதில், 1.27 மில்லியன் உயிரிழப்புகளுக்கு நேரடிக் காரணம் நுண்ணுயிர் எதிர்ப்புத் திறன் கொண்ட பாக்டீரியத் தொற்றுகளாகும்.
நான்கு பாக்டீரியா நோய்க் கிருமிகளுக்கு எதிராக ஏற்கனவே தடுப்பூசிகள் உள்ளன.
நிமோனியா நோய் (ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நிமோனியா)
ஹிப் (ஹீமோபிலஸ் இன்ஃப்ளூயன்ஸா B வகை )
காசநோய் (மைக்கோபாக்டீரியம் காசநோய்) மற்றும்
டைபாய்டு காய்ச்சல் (சால்மோனெல்லா டைஃபி).
காசநோய் தடுப்பூசி தவிர, மீதமுள்ள மூன்று தடுப்பூசிகளும் திறன்மிக்கவை ஆகும்.