TNPSC Thervupettagam

நுண்ணுயிர்க் கொல்லி எதிர்ப்பு

June 22 , 2019 1984 days 1185 0
  • உலக சுகாதார அமைப்பானது அனைத்து நாட்டு அரசுகளும் “AWaRe” (for Access, Watch, and Reserve) எனும் கருவியை ஏற்றுக் கொள்ளுமாறு ஒரு உலகளாவிய விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
  • இது நுண்ணுயிர்க் கொல்லி எதிர்ப்பு, அதன் பரவல், அதன் பாதகமான விளைவுகள் மற்றும் அதனால் ஏற்படும் செலவுகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • WHO-ன் அத்தியாவசிய மருந்துகள் பட்டியலால் உருவாக்கப்பட்ட இந்தக் கருவியானது அதிகரித்து வரும் நுண்ணுயிர்க் கொல்லி எதிர்ப்பைத் தடுக்கவும் நுண்ணுயிர் எதிர்ப்புப் பொருட்களைப் பாதுகாப்பாகவும் மிகுந்த திறனுடையதாகவும் பயன்படுத்தக் கூடியதாக மாற்றும்.
  • இது நுண்ணுயிர் எதிர்ப்புப் பொருட்களை மூன்று குழுவாக வகைப்படுத்துகின்றது
    • அணுகுதல் : மிகவும் பொதுவான மற்றும் தீவிரமான தொற்று நோய்களுக்குப் பயன்படுத்தப்படும் நுண்ணுயிர் எதிர்ப்புப் பொருட்களைக் கொண்டது
    • கண்காணிப்பு : சுகாதார அமைப்பில் அனைத்து நேரங்களிலும் கட்டாயமாக கிடைக்க வேண்டிய நுண்ணுயிர் எதிர்ப்புப் பொருட்களைக் கொண்டது.
    • பாதுகாக்கப்பட்டவை : மிகக்குறைவான அளவில் பயன்படுத்தப்பட வேண்டியவை அல்லது பாதுகாக்கப்பட வேண்டியவை மற்றும் கடைசி முயற்சியாக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டிய பொருட்களைக் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்