TNPSC Thervupettagam

நுண்ணுயிர்க் கொல்லி எதிர்ப்பு

December 10 , 2019 1719 days 626 0
  • இந்தியப் பொதுச் சுகாதார அமைப்பை (Public Health Foundation of India - PHFI) சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் நடத்தப் பட்ட புதிய ஆய்வின் படி, தனியார் துறையில் நுண்ணுயிர்க் கொல்லி தொடர்பான மருந்துகளைப் பரிந்துரைக்கும் விகிதம் அதிகமாக உள்ளது.
  • வெளிநோயாளிகளுக்கு நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளின் பரிந்துரைப்பு விகிதங்கள் மற்றும் தனியார் துறையில் உள்ள நுண்ணுயிர்க் கொல்லி மருந்து முறைகள் ஆகியவை பற்றிய முதலாவது மதிப்பீடு இதுவாகும்.
  • தனியார் துறையானது அதிக அளவு நுண்ணுயிர்க் கொல்லி மருந்து விகிதங்களைக் கண்டுள்ளது (வருடத்திற்கு 1,000 நபர்களுக்கு 412 என்ற அளவில்).
  • இந்த விகிதமானது 0 முதல் 4 வயதுடைய குழந்தைகளிடையே (1,000 நபர்களுக்கு 636 என்ற அளவில்) அதிகமாகவும் 10 முதல் 19 வயதுக்கு உட்பட்டவர்களிடையே மிகக் குறைவாகவும் (1,000 நபர்களுக்கு 280 என்ற அளவில்) காணப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்