TNPSC Thervupettagam
December 26 , 2019 1670 days 584 0
  • வாகனங்களில் நுண்புள்ளிகள் அடையாளங்காட்டிகளை நிர்ணயிப்பதற்கான விதிகளை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
  • நுண்புள்ளித் தொழில்நுட்பம் என்பது வாகனத்தின் முழுப்பகுதி மற்றும் பாகங்களையும் அல்லது வேறு எந்த ஒரு இயந்திரத்தையும் நுண்ணிய புள்ளிகளால் தெளிப்பதாகும். இது அந்த வாகனத்திற்கு ஒரு தனித்துவமான அடையாளத்தை அளிக்கின்றது.
  • இந்த நுண்புள்ளியை ஒரு நுண்ணோக்கியின் மூலம் நேரடியாகப் பார்க்க முடியும். இதை அதன் செறிந்த ஊதா நிற ஒளி மூலத்தைக் கொண்டு அடையாளம் காணலாம்.
  • நுண்புள்ளிகள் மற்றும் பிசின் ஆகியவை அந்த வாகனத்தின் நிரந்தர சாதனங்கள் /இணைப்புப் பகுதியாக மாறிவிடும். அந்த பாகத்தை அல்லது வாகனத்தை  சேதப் படுத்தாமல் இந்த நுண்புள்ளியை அகற்ற முடியாது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்