2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதி ஒடிசாவில் விவசாயத் திருவிழாவான நுவாகாய் தொடங்கியது.
நுவா (Nua) என்ற சொல்லிற்கு ‘புதியது’ எனவும் காய் (Khai) என்ற சொல்லிற்கு ‘உணவு’ என்றும் பொருள்படும். எனவே இந்த பெயரின் பொருளானது விவசாயிகள் புதிதாக அறுவடை செய்யப்பட்ட அரிசியை கொண்டுள்ளனர் என்பதாகும்.
விநாயகர் சதுர்த்தி திருவிழாவிற்கு அடுத்த நாள் கொண்டாடப்படும் இவ்விழாவானது நம்பிக்கையின் புது ஒளியாகப் பார்க்கப்படுகிறது.
நுவாகாய் ஜீஹார் என்பது இவ்விழாவின் முக்கிய சடங்காகும்.