TNPSC Thervupettagam

நூற்றாண்டின் நீளமான முழு சந்திர கிரகணம்

July 15 , 2018 2196 days 740 0
  • மத்திய புவி அறிவியல் அமைச்சகம், 1 மணி நேரம் 43 நிமிடங்கள் கால அளவிலான இந்நூற்றாண்டின் (2001 AD முதல் 2100 AD வரை) நீளமான முழு சந்திரகிரகணம் இவ்வாண்டு ஜூலை 27-28  ஏற்படும் என்று அறிவித்துள்ளது.
  • முழு கிரகணத்தையும் இந்தியாவின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் பார்க்க முடியும்.
  • ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் ரஷ்யா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா (கிழக்குப் பகுதிகள்) மற்றும் அண்டார்டிக்கா (கிழக்குப் பகுதிகள்) ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதிகளிலும் இதனைப் பார்க்க முடியும்.
  • இத்தகைய நீண்ட கால முழு சந்திர கிரகணம் இதற்கு முன்பு ஜூலை 16, 2000-ல் 1 மணி நேரம் 46 நிமிடங்கள் என்ற முழுமையான கால அளவிலும் ஜூன் 15, 2011-ல் 1 மணி நேரம் 40 நிமிடங்கள் என்ற முழுமையான கால அளவிலும் ஏற்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்