மத்திய புவி அறிவியல் அமைச்சகம், 1 மணி நேரம் 43 நிமிடங்கள் கால அளவிலான இந்நூற்றாண்டின் (2001 AD முதல் 2100 AD வரை) நீளமான முழு சந்திரகிரகணம் இவ்வாண்டு ஜூலை 27-28 ஏற்படும் என்று அறிவித்துள்ளது.
முழு கிரகணத்தையும் இந்தியாவின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் பார்க்க முடியும்.
ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் ரஷ்யா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா (கிழக்குப் பகுதிகள்) மற்றும் அண்டார்டிக்கா (கிழக்குப் பகுதிகள்) ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதிகளிலும் இதனைப் பார்க்க முடியும்.
இத்தகைய நீண்ட கால முழு சந்திர கிரகணம் இதற்கு முன்பு ஜூலை 16, 2000-ல் 1 மணி நேரம் 46 நிமிடங்கள் என்ற முழுமையான கால அளவிலும் ஜூன் 15, 2011-ல் 1 மணி நேரம் 40 நிமிடங்கள் என்ற முழுமையான கால அளவிலும் ஏற்பட்டது.