TNPSC Thervupettagam

நூற்றாண்டில் ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ளம் – வடக்கு குயின்ஸ்லாந்து

December 24 , 2023 337 days 198 0
  • ஜாஸ்பர் என்ற வெப்பமண்டலப் புயல் ஆனது, ஆஸ்திரேலியாவின் தொலைதூர வடக்கு குயின்ஸ்லாந்து பகுதியில் இந்த நூற்றாண்டிலேயே இல்லாத மிகப்பெரிய வெள்ளத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • இரண்டு மழை அளவிகளில் வெறும் 12 மணி நேரத்தில் 660 மில்லிமீட்டர் (26 அங்குலம்) மழைப் பொழிவு பதிவாகியுள்ளது.
  • இது 1972 ஆம் ஆண்டில் அந்த மாகாணத்தில் பதிவான 617 மி.மீ. என்ற முந்தைய மழைப் பொழிவின் அளவை விஞ்சியது.
  • மயோலாவில் உள்ள பாரோன் நதியில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக ஏற்படாத ஒரு அளவிலான அதிகபட்ச வெள்ளம் ஏற்பட்டது.
  • டெய்ன்ட்ரீ நதியில், இதுவரையில் பதிவான அதிகபட்ச வெள்ளப்பெருக்கு அளவைத் தாண்டி வெள்ளம் ஏற்பட்டது.
  • இது 2019 ஆம் ஆண்டில் பதிவான சாதனை அளவான 12.6 மீட்டருக்கு மேலாக தற்போது 15 மீட்டர் என்ற மழைப்பொழிவு அளவை எட்டியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்