TNPSC Thervupettagam

நூற்றி இருபத்தி எட்டாவது திருத்த மசோதா 2023

September 22 , 2023 304 days 214 0
  • 2023 ஆம் ஆண்டு அரசியலமைப்பு (நூற்று இருபத்தி எட்டாவது திருத்தம்) மசோதாவானது, மக்களவை மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்க முயல்கிறது.
  • இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு நடத்தப்படும் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பின் தரவுகளைப் பயன்படுத்தி, தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முடிந்த பின்னரே இது செயல்படுத்தப் படும்.
  • அடுத்த தொகுதி மறுசீரமைப்பு அல்லது தொகுதி எல்லைகளை மறுவடிவமைப்பு செய்யும் நடவடிக்கையானது 2026 ஆம் ஆண்டில் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
  • இந்த மசோதாவானது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தினால் 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதியன்று மக்களவையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப் படுத்தப் பட்டது.
  • கீதா முகர்ஜி தலைமையிலான நாடாளுமன்றக் கூட்டு குழுவின் மதிப்பீட்டிற்காக இது பரிந்துரைக்கப்பட்டது.
  • இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட 950 மில்லியன் வாக்காளர்களில் கிட்டத்தட்ட பாதிப் பேர் பெண்கள் ஆவர், ஆனால் பாராளுமன்றத்தில் 15% மற்றும் மாநில சட்டமன்றங்களில் 10% மட்டுமே பிரதிநிதித்துவம் பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்