ஜெர்மனியில் உள்ள அறிவியலாளர்கள் நெகிழிகளை உண்ணும் பூஞ்சைகளை கண்டறிந்து ள்ளனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட 18 பூஞ்சை திரிபுகளில், நான்கு திரிபுகள் நெகிழிகளை குறிப்பாக கட்டுமான பயன்பாட்டுப் பஞ்சுகளை உருவாக்கப் பயன்படுகின்ற பாலியூரிதீன்களை திறம்பட பயன்படுத்துகின்றன.
நெகிழி பைகள் மற்றும் பொட்டலங்களில் பயன்படுத்தப்படும் பாலி எத்திலீன், மிகவும் மெதுவாக சிதையக் கூடியது.
புதைபடிவ கார்பனிலிருந்து நெகிழிகள் தயாரிக்கப் படுகிறது என்பதோடு மேலும் காளான்கள்களால் அவற்றைச் சிதைக்க முடிவது என்பது எண்ணெயினை அல்லது வாயுவை எரித்து, வளிமண்டலத்தில் CO2 வாயுவினை வெளியிடுவதில் இருந்து இது எவ்விதத்திலும் வேறுபட்டதல்ல.
1950 ஆம் ஆண்டில் 1.7 மில்லியன் டன்களாக இருந்த உலகளாவிய நெகிழி உற்பத்தி 2021 ஆம் ஆண்டில் 390 மில்லியன் டன்கள் ஆக பதிவானது.
ஆனால், உலகளவில் 10 சதவீதத்திற்கும் குறைவான நெகிழிக் கழிவுகள் மட்டுமே மறு சுழற்சி செய்யப்படுகின்றன.