நெகிழிக் கழிவுகளை இறக்குமதி செய்வதைத் தடை செய்வதன் மூலம் உலகளாவிய நெகிழிக் கழிவு நெருக்கடியை எதிர்கொள்ளும் சமீபத்திய நாடாக தாய்லாந்து மாறி உள்ளது.
2018 ஆம் ஆண்டிலிருந்து, அமெரிக்கா, ஐக்கியப் பேரரசு மற்றும் ஜப்பான் போன்ற பல்வேறு வளர்ச்சியடைந்த நாடுகளிலிருந்து இந்த நெகிழிக் கழிவுகளை இறக்குமதி செய்யும் முன்னணி நாடாக தாய்லாந்து உள்ளது.
2018 மற்றும் 2021 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கு இடையில், அந்நாடு 1.1 மில்லியன் டன்களுக்கும் அதிகமான நெகிழிக் கழிவுகளை இறக்குமதி செய்தது.
2023 ஆம் ஆண்டில், ஜப்பான் மட்டும் சுமார் 50 மில்லியன் கிலோகிராம் (50,000 டன்) நெகிழிக் கழிவுகளைத் தாய்லாந்திற்கு ஏற்றுமதி செய்தது.