நெகிழிக் கழிவு உற்பத்தியானது உலகக் கழிவு மேலாண்மைத் திறனை விஞ்சும் தினம் - 2023 அறிக்கை
August 4 , 2023 483 days 297 0
இந்த ஆண்டில் கிட்டத்தட்ட 68,642,999 டன் நெகிழிக் கழிவுகள் இயற்கை வாழிடங்களில் வீசப் படும் என்று இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
உலகிலுள்ள முறையாக கையாளப்படாத 52 சதவீதக் கழிவுகளுக்குக் காரணமான 12 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.
ஒரு நபருக்கான வருடாந்திர நுகர்வு 128.9 கிலோ என்ற அளவுடன் உலகிலேயே அதிக அளவில் நெகிழிக் கழிவுகளை உண்டாக்கும் நாடாக ஐஸ்லாந்து உள்ளது.
இது இந்தியாவில் பதிவாகியுள்ள ஒரு நபருக்கான வருடாந்திர நுகர்வான 5.3 கிலோ என்ற அளவை விட 24.3 மடங்கு அதிகம் ஆகும்.
உலகளவில் ஓர் ஆண்டில் ஒரு நபரின் சராசரி நெகிழி நுகர்வு 20.9 கிலோ ஆகும்.
2023 ஆம் ஆண்டில் உலகளவில் 159 மில்லியன் டன் நெகிழிகள் (குறுகியக் காலத்திற்கு மட்டுமே பயன்படுத்தக் கூடியவை) உற்பத்தி செய்யப்படும்.
இவற்றில் 43 சதவீதமானது (68.5 மில்லியன் டன்கள்) மாசினை ஏற்படுத்தச் செய்வதாக அமையும்.
ஆண்டுதோறும் வணிகப் பயன்பாட்டிற்கு உட்படுத்தப்படும் மொத்த நெகிழிப் பொருட்களில் சுமார் 37 சதவிகிதம் குறுகிய காலம் மட்டுமே பயன்படுத்தக் கூடிய நெகிழிகள் ஆகும்.
முறையாகக் கையாளப்படாத நெகிழிக் கழிவுகளை அதிகளவில் கொண்ட மூன்று நாடுகள் மொசாம்பிக் (99.8 சதவீதம்), நைஜீரியா (99.44 சதவீதம்) மற்றும் கென்யா (98.9 சதவீதம்) ஆகியனவாகும்.
இந்தியாவில் 98.55 சதவீதக் கழிவுகள் முறையாகக் கையாளப்படாத நிலையில் இந்தக் குறியீட்டில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.
இந்தியா ஆண்டுதோறும் சுமார் 14.2 மில்லியன் டன் நெகிழிக் கழிவுகளைச் செயல் முறையாக்கும் திறனைக் கொண்டுள்ளது.