நெகிழிக் கழிவுகளைக் குறைப்பதற்கான தேசிய வட்டாரப் பொருளாதாரச் சாலை வரைபடம்
December 9 , 2023 351 days 228 0
மத்திய அமைச்சரான டாக்டர் ஜிதேந்திர சிங் இந்த அறிக்கையினை வெளியிட்டார்.
இது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்களின் கூட்டு முயற்சியாகும்.
அடுத்த ஆண்டு இறுதி செய்யப்பட இருக்கின்ற, உலகளாவிய நெகிழி ஒப்பந்தத்தினை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகளில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மிகவும் தீவிரமாகப் பங்கேற்கின்றன.
நெகிழித்துறையில் ஒரு வட்டாரப் பொருளாதாரத்திற்கு இந்தியா மாறுவதற்கான பாதைக்கான வரைபடத்தை உருவாக்க வேண்டி ஆராய்ச்சி மற்றும் தொழில் கூட்டாண்மைகளை நிறுவுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
2070 ஆம் ஆண்டிற்குள் நிகரப் பூஜ்ஜிய இலக்கை அடைவதற்கான வட்டாரப் பொருளாதாரத்திற்கான தேடலில் இந்தியா முன்னணியில் உள்ளது.