நெகிழிக் குடுவைகளின் தனித்துவமான பயன்பாடு
June 8 , 2022
904 days
481
- அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவானது, உலக சுற்றுச்சூழல் தினத்தன்று ஒரு புதிய முன்னெடுப்பினை அறிமுகப்படுத்தியுள்ளது.
- அது பூங்காவில் நெகிழிக் குடுவை கழிவுகளைத் தூக்கி எறிதல் மற்றும் மாசுபடுத்துதல் ஆகியவற்றைக் கண்காணிப்பதற்காக ஒரு புதிய முறையை அறிமுகப்படுத்தியது.
- உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, “மஞ்சப்பை” எனப்படும் பாரம்பரியத் துணிப் பைகள் விநியோகிக்கப்பட்டன.
- அது மிருகக்காட்சிச் சாலைக்கு வருகை தரும் பார்வையாளர்களிடமிருந்து, ஒவ்வொரு நெகிழித் தண்ணீர் குடுவைக்கும் 10 ரூபாய் வசூலிக்கத் தொடங்கியுள்ளது.
- பார்வையாளர்கள் காலியானக் குடுவையை மிருகக்காட்சி சாலையில் உள்ள விற்பனையாளரிடம் திருப்பிக் கொடுத்து அந்தப் பணத்தைத் திரும்பப் பெறலாம்.
- அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவானது, வண்டலூர் உயிரியல் பூங்கா என்றும் அழைக்கப் படுகிறது.
- 1855 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்தியாவின் முதல் பொது உயிரியல் பூங்கா இது ஆகும்.
Post Views:
481