பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரான மணிலாவிற்கு அருகே உள்ள பேயானன் என்ற பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் தங்கள் நெகிழிக் குப்பைகளை ஒப்படைத்து அதற்குப் பதிலாக அரிசியைப் பெற்றுக் கொள்ளலாம்.
கடலில் நெகிழி மாசுவை ஏற்படுத்தும் முன்னணி நாடுகளில் பிலிப்பைன்ஸ் நாடும் ஒன்றாகும்.
நெகிழிக் கழிவுகளில் பாதிக்கும் மேலானது சீனா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் ஐந்து நாடுகளிலிருந்துப் பெறப் படுகின்றது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் கூற்றுப்படி, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 300 மில்லியன் டன் நெகிழிக் கழிவுகள் உருவாக்கப் படுன்றன.
இதுவரை உற்பத்தி செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளில் 9% மட்டுமே மறுசுழற்சி செய்யப் பட்டுள்ளன. இன்று, மறுசுழற்சிக்காக வெறும் 14% பிளாஸ்டிக் கழிவுகள் மட்டுமே சேகரிக்கப் படுகின்றன.