கிரேட்டர் நொய்டாவில் உள்ள சிவ் நாடார் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு, இரண்டு ‘நெகிழிப் பொருட்களை உண்ணும்’ பாக்டீரியாக்களைக் கண்டுபிடித்துள்ளது.
இந்த பாக்டீரிய விகாரங்கள் ஆனது எக்சிகுயோபாக்டீரியம் சிபிரிகம் திரிபு டிஆர் 11 மற்றும் எக்சிகோபாக்டீரியம் அன்டே திரிபு டிஆர் 14 எனப் பெயர் கொண்டுள்ளது.
ஒற்றைப் பயன்பாட்டு நெகிழிப் பொருட்களான தூக்கியெறியக் கூடிய குழாய்கள், தட்டுகள், கரண்டிகள், பொம்மைகள், பொதிகட்டும் பொருட்கள் போன்றவற்றில் முக்கிய அங்கமாக இருக்கும் பாலிஸ்டிரீனைச் சிதைப்பதற்கான திரிபுகளுக்கு இந்த பாக்டீரியாக்களின் திரிபுகள் பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளன.