TNPSC Thervupettagam

நெகிழியிலிருந்து கழிவு – இந்தியப் பெட்ரோலிய நிறுவனம், டேராடூன்

August 28 , 2019 1789 days 490 0
  • அறிவியல்சார் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மையம் - இந்தியப் பெட்ரோலிய நிறுவனமானது (CSIR-IIP) நெகிழியை ஒழிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக உத்தரகாண்டில் உள்ள டேராடூனில் நெகிழிக் கழிவிலிருந்து டீசல் தயாரிக்கும் ஒரு ஆலையை அமைத்துள்ளது.
  • இந்த ஆலையானது 1 டன் நெகிழியிலிருந்து 800 லிட்டர் டீசலை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
  • 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், இந்தியாவின் முதலாவது உயிரி எரிபொருள் ஜெட் விமானமானது CSIR-IIPயினால் தயாரிக்கப்பட்ட உயிரி எரிபொருளில் இயங்கியது.
  • டேராடூனில் அமைந்துள்ள இந்த நிறுவனம் 1960 இல் நிறுவப் பட்டது. ஹைட்ரோகார்பன் துறையில் ஆராய்ச்சி & வளர்ச்சிக்காக இது அர்ப்பணிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்