TNPSC Thervupettagam

நெகிழ்திறன் கொண்ட உள்கட்டமைப்பிற்கான மேம்பாட்டு நிதி

November 18 , 2022 609 days 307 0
  • இது COP27 மாநாட்டில் பேரிடர்களைத் தாங்கும் உள்கட்டமைப்புக்கான கூட்டணியால் (CDRI) இந்தியா தரப்பில் அறிவிக்கப்பட்டது.
  • இந்தப் பல்வேறு நன்கொடையாளர் கொண்ட அறக்கட்டளை நிதியம் ஆனது ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்ட அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகளின் பேரிடர் இடர் குறைப்பு அலுவலகம் (UNDRR) ஆகியவற்றின் உதவியுடன் நிறுவப்பட்டது.
  • இந்த நிதியானது, நியூயார்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் பல பங்குதார அறக்கட்டளை நிதி அலுவலகத்தினால் (UN MPTFO) நிர்வகிக்கப்படும்.
  • இந்த நிதியானது குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகள் மற்றும் சிறு தீவு நாடுகளில் பேரிடர்களைத் தாங்கும் திறன் கொண்ட உள்கட்டமைப்பு அமைப்புகளை உருவாக்கச் செய்வதற்கான உலகளாவிய முன்னெடுப்புகளுக்கு உதவும்.
  • பேரிடர்களைத் தாங்கும் உள்கட்டமைப்புக்கான கூட்டணியானது, (CDRI) 2019 ஆம் ஆண்டில் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் பருவநிலை நடவடிக்கை உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் அவர்களால்  தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்