G7 நாடுகளின் உச்சி மாநாட்டில் பிரதமர் அவர்கள் கலந்து கொண்டதையடுத்து "2022 ஆம் ஆண்டு நெகிழ்திறன்மிக்க மக்களாட்சி அறிக்கை" கையெழுத்தானது.
இந்தியாவுடன் சேர்ந்து, ஜெர்மனி, அர்ஜென்டினா, கனடா, பிரான்ஸ், இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், செனகல், தென்னாப்பிரிக்கா, ஐக்கிய இராஜ்ஜியம், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளும் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டு உள்ளன.
கையொப்பமிட்ட நாடுகள், குடிமக்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு ஒரே மாதிரியான சட்டப்பூர்வமான தன்மை, வெளிப்படைத்தன்மை, பொறுப்பு மற்றும் பதிலளிக்க வேண்டிய கட்டாயம் ஆகியவற்றினை மேம்படுத்தச் செய்யும் வகையில், "வெளிப்படையான பொது விவாதம், சுதந்திரமான மற்றும் பன்மைத்துவ ஊடகங்கள்" மற்றும் "இணையதள மற்றும் நேரடி தகவல்களை தடையற்ற முறையில் வழங்குதல்" ஆகியவற்றை மக்களாட்சி செயல்படுத்தும் என்று கூறுகின்றன.