நெகிழ்திறன் மிக்க வறண்ட நிலங்களுக்கான உலகளாவிய உத்தி 2030
December 13 , 2024 9 days 56 0
வேளாண் ஆராய்ச்சியில் உலகளவில் முன்னணியில் உள்ள நிறுவனமான CGIAR (Consultative Group on International Agricultural Research), அதன் 2030 ஆம் ஆண்டிற்கான நெகிழ்திறன் மிக்க வறண்ட/உலர் நிலங்களுக்கான உலகளாவிய உத்தியை (GSRD) அறிமுகப்படுத்தியுள்ளது.
இது ரியாத் நகரில் நடைபெற்ற UNCCD உடன்படிக்கையின் 16 வது பங்குதாரர்கள் மாநாட்டில் (COP 16) வெளியிடப்பட்டது.
உலக மக்கள்தொகைக்கு வறண்ட நிலங்கள் மிக முக்கியமானவையாகும்.
இது உலகிலுள்ள ஒவ்வொரு மூன்றில் ஒருவருக்கும், சுமார் பாதியளவு கால்நடைகள் மற்றும் 44 சதவீத உணவு முறைகளுக்கு ஆதாரமாக உள்ளது.
ஆனால் அவற்றில் 20-35 சதவீதம் பகுதிகள் வளம் குன்றியுள்ளன.