இலண்டன் நகரைச் சேர்ந்த இணையச் சங்கேதப் பணம் சார்ந்த கடன் வழங்கும் ஒரு நிறுவனமான நெக்ஸோ, உலகளாவியக் கொடுப்பனவு நிறுவனமான மாஸ்டர்கார்டு நிறுவனத்துடன் கை கோர்த்துள்ளது.
இது உலகில் முதல்முறையாக "இணையச் சங்கேதப் பணம் சார்ந்த கொடுப்பனவு அட்டைகளை" அறிமுகப்படுத்த உள்ளது.
மின்னணுப் பணம் சார்ந்த ஒரு நிறுவனமான டிபாக்கெட் என்பது நெக்ஸோ என்ற நிறுவனத்திற்கு அட்டைகளை வழங்கும் ஒரு நிறுவனமாகும்.
இந்த அட்டைக்குக் குறைந்தபட்ச திருப்பிச் செலுத்தும் வகையிலான தொகையோ, மாதாந்திரக் கட்டணங்களோ அல்லது செயலற்ற நிலையில் இருப்பதற்கான கட்டணங்களோ தேவையில்லை.
ஒரு மாதத்திற்கு 20,000 யூரோக்கள் வரையில் FX கட்டணம் (foreign transaction) இல்லை.
20% அல்லது அதற்கும் குறைவான கடன் மதிப்பு விகிதத்தைக் கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு 0% வட்டி வழங்கப்படும்.