TNPSC Thervupettagam

நெடுஞ்சாலைகளுக்கான செயல்திறன் மதிப்பீட்டு அமைப்பு

December 17 , 2024 10 days 42 0
  • இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) ஆனது, நெடுஞ்சாலைகளின் செயல்பாடு மற்றும் அதன் பராமரிப்பில் ஈடுபட்டுள்ள ஒப்பந்ததார நிறுவனங்களை மதிப்பிடுவதற்கான ஒரு நெறிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • 100க்கு 60க்கும் குறைவான மதிப்பெண்கள் பெற்ற ஒப்பந்ததார நிறுவனங்கள் ஆனது, "செயல்திறன் குறைவாக கொண்டவை" என்று அறிவிக்கப்படும், இதன் மூலம் அவை புதியத் திட்டங்களுக்கான ஒப்புதலைப் பெறுவதற்கான வாய்ப்புகள் இனி குறைக்கப் படுகிறது.
  • இதன் மதிப்பெண்கள் மற்றும் மதிப்பீடுகள் பின்வரும் ஐந்து முக்கிய அளவுருக்களின் நோக்கம் சார் மதிப்பீட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது : கடினத்தன்மை, குழிகள், பள்ளத்தின் ஆழம், மேற்பரப்பு விரிசல், அவற்றைச் சரி செய்வதற்கான ஒட்டு வேலை மற்றும் சாலைகளின் மேற்பரப்பு தேய்மானம்.
  • NHAI ஆனது இந்தச் சூழ்நிலைமையை மதிப்பிடுவதற்காக என தேசிய நெடுஞ்சாலை வலையமைப்பில் ஒளிப்படக் கருவிகள் மற்றும் உணர்விகள் பொருத்தப்பட்ட வலை அமைப்பு மதிப்பீட்டு வாகனங்களையும் (NSVs) நிலைநிறுத்த உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்