TNPSC Thervupettagam

நெடுஞ்சாலைக் கிராமங்கள் (Highway village) மற்றும் நெடுஞ்சாலைப் பின்னல்கள் (Highway Nests)

August 4 , 2017 2715 days 1035 0
  • இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமானது தேசிய நெடுஞ்சாலைகளை ஒட்டி நாடு முழுவதும் 183 இடங்களில் வாகன ஓட்டிகள் ஓய்வு எடுப்பதற்கும் இளைப்பாறுவதற்கும் உண்டான வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்கான நடைமுறைகளை துவங்கி இருக்கிறது.
  • இந்த இடங்களில் அனைத்து வித வசதிகளும் வாகன ஓட்டிகளுக்கு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
  • "நெடுஞ்சாலை கிராமங்கள்" (Highway Villages) என்பது தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் 5 ஏக்கருக்கு மேல் உருவாக்கப்படுகின்ற பல வசதிகளுடன் கூடிய அமைப்பாகும். அதற்கு குறைவான ஏக்கர் மதிப்பில் இருப்பது "நெடுஞ்சாலைப் பின்னல்" (Highway Nest) ஆகும்.
  • தேசிய நெடுஞ்சாலையில் ஒவ்வொரு 50 கிலோ மீட்டருக்கும் இந்த வசதிகள் உருவாக்கப்பட இருக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்