நெப்டிஸ் பிலிரா என்ற அரிய வகை வண்ணத்துப் பூச்சி இனம் ஆனது, அருணாச்சலப் பிரதேசத்தின் தாழ்மட்ட சுபன்சிரி மாவட்டத்தில் உள்ள டேல் பள்ளத்தாக்கு வனவிலங்குச் சரணாலயத்தில் இந்தியாவிலேயே முதல் முறையாக கண்டறியப் பட்டு உள்ளது.
இது பொதுவாக நீண்ட கோடுகள் கொண்ட பயணி என்று அழைக்கப்படுகிறது.
இன்றுவரையில், கிழக்கு சைபீரியா, கொரியா, ஜப்பான், மத்திய மற்றும் தென்மேற்கு சீனா உள்ளிட்ட கிழக்கு ஆசியாவின் பல்வேறு பகுதிகளில் இந்த வண்ணத்துப் பூச்சி இனங்கள் காணப் படுவதாக அறியப்பட்டது.