தமிழக முதல்வர் அவர்கள் நெம்மேலி கடல்நீர் சுத்திகரிப்பு ஆலையைத் திறந்து வைத்தார்.
இது சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள 9 லட்சம் குடியிருப்புகளுக்குக் குடிநீர் வழங்கும் வகையில் ஒரு நாளைக்கு 150 மில்லியன் லிட்டர் கொள்ளளவு (mld) நீரை சுத்திகரிப்பு செய்யக் கூடியது.
மீஞ்சூரில் ஒரு நாளைக்கு 100 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆலை மற்றும் நெம்மேலியில் ஒரு நாளைக்கு 110 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆலைக்கு அடுத்தபடியாக நகரில் அமைக்கப்பட்டுள்ள மூன்றாவது கடல் நீர் சுத்திகரிப்பு ஆலை இதுவாகும்.
இந்தியாவில் சென்னை நகரம் மட்டும் தான் 750 மில்லியன் லிட்டர் அளவிற்குக் கடல் நீரைக் குடிநீராக்கும் முதல் நகரமாகும்.
இது நெம்மேலி மற்றும் மீஞ்சூர் ஆகியவற்றில் தலா 100 மில்லியன் லிட்டர் ஆலை, நெம்மேலியில் மற்றுமொரு 150 மில்லியன் லிட்டர் ஆலை, நெம்மேலி அருகில் பேரூரில் கட்டப் பட்டு வரும் 400 மில்லியன் லிட்டர் ஆலை ஆகியவற்றைக் கொண்டதாகும்.