August 15 , 2022
836 days
1235
- தமிழக முதல்வர் அவர்கள் நெய்தல் உப்பு என்ற தயாரிப்பினை அறிமுகம் செய்தார்.
- இது தமிழ்நாடு உப்பு உற்பத்திக் கழகத்தால் தயாரிக்கப்பட்டுச் சந்தைப்படுத்தப்படும் உப்பாகும்.
- நாட்டில் உற்பத்தி செய்யப்படும் 300 லட்சம் மெட்ரிக் டன் உப்பில் 8% அளவினை (24 லட்சம் மெட்ரிக் டன்) தமிழ்நாடு உற்பத்தி செய்கிறது.
- தமிழக மாநிலமானது உப்பு உற்பத்தியில் இந்தியாவில் குஜாரத் மாநிலத்தினை அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளது.
- தமிழ்நாடு உப்பு உற்பத்திக் கழகம் ஆனது 1974 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
- இந்தியாவில் உப்பு மற்றும் உப்பு சார்ந்தப் பொருட்களை உற்பத்தி செய்கின்ற, மாநில அரசுக்குச் சொந்தமான ஒரே நிறுவனம் இதுவாகும்.
Post Views:
1235