TNPSC Thervupettagam

நெய்புன்ய ரதம் – ஆந்திரப் பிரதேசம்

March 26 , 2018 2467 days 840 0
  • பல்பயன்பாட்டு வாகனமான நெய்புன்ய ரதம் – ஆந்திரப் பிரதேச முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கமானது தொலைதூரப் பகுதிகளிலும் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் (Innovation) ஆகியவற்றைக் கொண்டு வருதலாகும்.

  

  • அரசு, மே மாதத்தில் மேலும் 12 நெய்புன்ய ரதங்களை செயல்பாட்டுக்குக் கொண்டு வரும்.
  • இத்திட்டமானது இந்திய தொழில் மேம்பாட்டுக் கழகம் மற்றும் மேம்பாட்டிற்கான வழிகாட்டு அறக்கட்டளையான, ஹியூலெட் பேக்கார்டுடன் இணைந்து செயல்படுத்தப்படும். இது முதல் கட்டமாக 13 மாவட்டங்கள் மற்றும் 28 ஸ்மார்ட் கிராமங்களில் செயல்படுத்தப்படும்.
  • டிஜிட்டல் கல்வியறிவு மற்றும் டிஜிட்டல் திறன்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த நெய்புன்ய ரதங்கள், ‘ஸ்மார்ட் கிராமங்கள் ஸ்மார்ட் வார்டு திட்டத்தின்’ ஒரு பகுதியாகும்.
  • பள்ளிக் குழந்தைகள் தொழில்நுட்ப மற்றும் கல்வி தொடர்பான தகவல்களை பெறவும், இளைஞர்கள் அவர்களுக்கான திறன் மேம்பாட்டு நோக்கங்களுக்காகவும் இந்த வாகனத்தைப் பயன்படுத்த முடியும். அதோடு, ஒரு சிறப்பம்சமாக இவ்வாகனம் பொழுதுபோக்கு அமைப்பையும் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்