TNPSC Thervupettagam

நெரியம் ஒலியாண்டர் – கேரளா

May 15 , 2024 47 days 149 0
  • 24 வயது பெண் ஒருவர் மரணமடைந்ததன் காரணமாக, மாநிலத்தில் உள்ள 2,500க்கும் மேற்பட்ட கோவில்களை நிர்வகிக்கின்ற கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இரண்டு கோவில் வாரியங்கள், ஓலியாண்டர் (அரளி) பூக்களைப் பயன்படுத்த தடை விதித்து உள்ளன.
  • நெரியம் ஒலியாண்டர் அல்லது பொதுவாக ஒலியாண்டர் அல்லது ரோஸ்பே என அழைக்கப் படுகின்ற இது உலகம் முழுவதும் வெப்பமண்டல, துணை வெப்ப மண்டல மற்றும் மிதவெப்ப மண்டலங்களில் பயிரிடப்படும் ஒரு தாவரமாகும்.
  • வறட்சியைத் தாங்கும் தன்மைக்கு பெயர் பெற்ற இந்தப் புதர்ச்செடி வகையானது பெரும்பாலும் அலங்கார மற்றும் நிலத்தோற்றங்களை வண்ணமயமாக மாற்றுதல் ஆகிய நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.
  • ஓலியாண்டரில் வெவ்வேறு வகைகள் உள்ளன என்ற நிலையில் அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு நிறத்திலான பூக்களைக் கொண்டுள்ளன.
  • இதன் வேர்ப்பட்டையிலிருந்துத் தயாரிக்கப்பட்ட எண்ணெய் தோல் நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.
  • சில ஆயுர்வேத சூத்திரங்களில் பயன்படுத்தப்பட இது பரிந்துரைக்கப்பட்டாலும், ஒலியண்டர் நச்சுத் தன்மை கொண்டதாகவும் நீண்ட காலமாக உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
  • மேலும், இதனை எரிப்பதால் ஏற்படும் புகையை உள்ளிழுப்பதும் போதை தரக்கூடியது  ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்