பிலிப்பைன்ஸ் நாட்டின் பனோஸ் நகரில் அமைந்துள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (IRRI – International Rice Research Institute) தனது பெயர் சூட்டப்பட்ட புதிய நெல் உற்பத்தி ஆய்வகத்தை இந்திய பிரதமர் தொடங்கி வைத்தார்.
விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்குவதற்காக அதிக மகசூல் தரவல்ல புதிய நெல் ரகங்களை உருவாக்கிட IRRI ன் பிராந்திய மையம் ஒன்றை இந்திய அரசு வாரணாசியில் அமைத்து வருகின்றது.
IRRI ஆனது, 1960’களின் பசுமைப் புரட்சிக்கு பெரும்பங்களிப்பு வழங்கிய நெல் இரகங்களின் கண்டுபிடிப்பால் அறியப்படும் ஓர் சர்வதேச வேளாண் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமாகும்.
நெல் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர்களின் ஆரோக்கியத்தை அதிகரித்தல், வறுமை மற்றும் பட்டினி ஒழிப்பு, நெல் உற்பத்தியின் நீடித்த சூழலை உறுதி செய்தல் போன்றவை இந்த அமைப்பின் நோக்கங்களாகும்..
அமைந்துள்ள இடம் - மணிலா, பிலிப்பைன்ஸ்
உணவுப் பாதுகாப்பில் ஆராய்ச்சியில் ஈடுபடும் உலக வேளாண் ஆராய்ச்சி மையங்களின் கூட்டிணைவான CGIAR (Consultative Group for International Agricultural Research) சர்வதேச வேளாண் ஆராய்ச்சி மையங்களுக்கான கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள 15 மையங்களில் IRRI ஆனது ஒரு மையமாகும்.
IRRI ஆனது ஆசியாவின் மிகப்பெரிய, இலாப நோக்கமற்ற வேளாண் ஆராய்ச்சி மையமாகும்.