தமிழ்நாடு பொது விநியோகக் கழகம் (TNCSC) ஆனது, காவிரி கழிமுகப் பகுதிகளில் / டெல்டாவில், நேரடிக் கொள்முதல் மையங்களில் (DPC) மேற்கொள்ளப்படும் ஒரு நெல் கொள் முதலில் ஊழல் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளதால் அது குறித்து நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது.
இது ஒரு மூத்த இந்தியக் காவல் பணி அதிகாரியை அதன் புலனாய்வுப் பிரிவுக்குத் தலைமையாக நியமிப்பது என்ற ஆலோசனையையும் மேற்கொண்டு வருகிறது.
இந்தப் பிரிவு தற்போது கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளரின் தலைமையின் கீழ் உள்ளது.
2011-12 ஆம் ஆண்டு முதல் 2020-21 ஆம் ஆண்டு வரையிலான மற்றும் இந்த நடப்பு ஆண்டிற்கான தரவுகளின் படி, சுமார் 10 மாவட்டங்களைக் கொண்ட இப்பகுதியானது, இந்த மாநிலத்தில் இருந்து பெறப்படும் மொத்த நெல் கொள்முதலில் குறைந்தது 80% பங்கினைக் கொண்டுள்ளது.
இந்தப் பகுதிக்குள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகியவற்றை உள்ளடக்கிய ஒட்டு மொத்தத் தஞ்சாவூர் பிராந்திய மாவட்டங்களின் பங்கு சுமார் 85% ஆகும்.
தமிழ்நாட்டில் இருந்து பெறப்பட்ட கொள்முதலில், இந்த நான்கு மாவட்டங்களின் பங்கு 67% முதல் 68% அல்லது மூன்றில் இரண்டு பங்கு என்ற அளவில் உள்ளது.