TNPSC Thervupettagam

நெல் கொள்முதல் – தமிழ்நாடு

February 3 , 2025 20 days 110 0
  • பொது விநியோக அதிகாரிகள் தமிழக விவசாயிகளிடமிருந்து சுமார் எட்டு லட்சம் டன் நெல் கொள்முதல் செய்துள்ளனர்.
  • கொள்முதல் செய்யப்பட்ட நெல்லில், சுமார் 6.2 லட்சம் டன் என்ற அளவிலான பெரும் பகுதி காவிரி டெல்டா மாவட்டங்களின் பங்காகும்.
  • தஞ்சாவூர் சுமார் இரண்டு லட்சம் டன் பங்குடன் முன்னணியில் உள்ளது.
  • தஞ்சாவூருக்கு அடுத்தபடியாக தோராயமாக 1.6 லட்சம் டன்கள் பங்குடன் திருவாரூர் இடம் பெற்றுள்ளது; 85,400 டன்கள் பங்குடன் மயிலாடுதுறையும் மற்றும் 70,500 டன்கள் பங்குடன் கடலூரும் அடுத்து இடம் பெற்றுள்ளன.
  • காவிரி டெல்டா அல்லாத மாவட்டங்களைப் பொறுத்தவரையில், செங்கல்பட்டு சுமார் 36,000 டன்கள்; ஈரோடு, 31,000 டன்கள்; மற்றும் திருவள்ளூர், 23,300 டன்கள் என்ற அளவுப் பங்குடன் முன்னணியில் உள்ளன.
  • மேற்குறிப்பிட்ட மாவட்டங்களின் குழு மட்டும் 1.67 லட்சம் டன்களை வழங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்