TNPSC Thervupettagam

நெல் ஜெயராமன் மறைவு

December 9 , 2018 2049 days 646 0
  • தமிழ்நாட்டின் பழங்கால நெல் வகைகளைப் பாதுகாப்பதிலும் பரப்புவதிலும் முன்னோடியான முன்னணி விவசாயியான ஜெயராமன் சென்னையில் காலமானார்.
  • திருத்துறைப்பூண்டியில் வாழ்ந்த இவர் 169-க்கும் மேற்பட்ட நெல் வகைகளை ஆவணப்படுத்திப் பாதுகாத்துள்ளார்.
  • உள்நாட்டு நெல் வகை மரபணுக்களின் முன் மாதிரியை பாதுகாக்கும் துறையில் இவர் ஆற்றிய ஊக்கமான பணிக்காக,
    • சிறந்த மரபணு மீட்பருக்கான தேசிய விருது 2015 மற்றும்
    • தமிழ்நாடு அரசின் சிறந்த இயற்கை விவசாயி விருது 2011                          ஆகியவை இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
  • மேலும் இவர் நெல்லதிகாரம் மற்றும் மாமருந்தாகும் பாரம்பரிய நெல் உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியுள்ளார்.
  • 2005 ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டத்தில் தனது சொந்த கிராமமான ஆதிரெங்கத்தில் ‘நமது நெல்லைப் பாதுகாப்போம்’ என்ற பிரச்சாரம் மற்றும் நெல் திருவிழா (ஒவ்வொரு மே மாதம்) ஆகியவற்றை அவர் தொடங்கினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்