16 வயதான ஸ்வீடிஷ் சுற்றுச்சூழல் பிரச்சாரகரான ஸ்வீடன் காலநிலை ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க்கின் பெயரில் ஒரு வண்டு இனத்திற்கு நெல்லோப்டோட்ஸ் கிரெட்டா என்று பெயரிடப் பட்டுள்ளது.
லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் விஞ்ஞானிகள் இதற்கு அவரது பெயரிட்டனர்.
நெல்லோப்டோட்ஸ் கிரெட்டா வண்டினம் முதன்முதலில் கென்யாவில் 1960 ஆம் ஆண்டுகளில் கண்டுபிடிக்கப் பட்டது.
பின்னர் இது 1978 ஆம் ஆண்டில் லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்திற்கு அன்பளிப்பாக வழங்கப் பட்டது.