TNPSC Thervupettagam

நேட்டோ-கொலம்பியா

June 1 , 2018 2273 days 717 0
  • தென் அமெரிக்க நாடான கொலம்பியா வட அட்லாண்டிக் ஒப்பந்தத்தில் அமைப்பில் முறையாக இணைந்துள்ளது. இதன் மூலம் இந்த NATO (North Atlantic Treaty Organization) கூட்டணியில் இணைந்துள்ள ஒரே லத்தின் அமெரிக்க நாடாக கொலம்பியா உருவாகியுள்ளது.
  • கொலம்பியாவில் கொலம்பிய அரசிற்கும் அந்நாட்டின் புரட்சிகர ஆயுதப் படையினிற்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதற்கு பிறகு, 2017ஆம் ஆண்டு மே மாதம் கொலம்பியாவுடன் 29 உறுப்பினர்களைக் கொண்ட நேட்டோ அமைப்பு ஓர் கூட்டிணைவு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டது.
  • சைபர் பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு, தீவிரவாதம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் போன்ற உலக பாதுகாப்பு விவகாரங்கள் மீது கொலம்பியா ஒத்துழைப்பினை வழங்கும்.
  • 1949ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி கையெழுத்திடப்பட்ட வட அட்லாண்டிக் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட 29 வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் அரசுகளுக்கிடையேயான இராணுவ கூட்டணியே நேட்டோ ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்