TNPSC Thervupettagam

நேட்டோ பிளஸ்

June 25 , 2023 392 days 223 0
  • அமெரிக்க மேலவை உறுப்பினர்கள் இந்திய நாட்டினை நேட்டோ பிளஸ் (வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு+) குழுவின் ஒரு பகுதியாக மாற்றும் மசோதாவினை அறிமுகப் படுத்தத் திட்டமிட்டுள்ளனர்.
  • நேட்டோ பிளஸ் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் தற்போது நேட்டோ அமைப்பின் உறுப்பினர் நாடுகள் மற்றும் ஐந்து இணை நாடுகள் இடம் பெற்றுள்ளன.
  • அந்த 5 நாடுகள் என்பது ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், இஸ்ரேல் மற்றும் தென் கொரியா ஆகியனவாகும்.
  • பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை சார்ந்த உறவுகளை மேம்படுத்துவதே இதன் நோக்கம் ஆகும்.
  • நேட்டோ என்பது 31 ஒத்த எண்ணம் கொண்ட வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் அட்லாண்டிக் கூட்டமைப்பு ஆகும்.
  • இது 1949 ஆம் ஆண்டு வட அட்லாண்டிக் ஒப்பந்தம் (வாஷிங்டன் ஒப்பந்தம்) மூலம் நிறுவப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்