TNPSC Thervupettagam

நேபாள எல்லையில் ரூ.159 கோடியில் பாலம்

August 24 , 2017 2682 days 904 0
  • இந்திய-நேபாள எல்லையில் உள்ள மேச்சி ஆற்றின் குறுக்கே புதியபாலம் கட்டுவதற்கான பணிகளைத் தொடங்கவும், அதற்கான செலவினைப் பகிர்ந்துகொள்ளவும், இந்தியா- நேபாளம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தப் பாலத்தை ரூ.65கோடி செலவில் கட்டிமுடிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
  • இதற்கான நிதியை, ஆசிய வளர்ச்சி வங்கி மூலமாக, மத்திய அரசு வழங்கும்.
  • மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கழகம் (என்எச்ஐடிசிஎல்), இந்தத் திட்டத்தை நிறைவேற்றும்.
  • நேபாளத்தின் மேச்சி நகரில் உள்ள காகர் விட்டா- மேற்கு வங்கத்தில் உள்ள பனிதாங்கி புறவழிச்சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில், 1,500 மீட்டர் நீளத்திலும், 6 வழிப்பாதைகளுடன் இந்தப் புதிய பாலம் இருக்கும்.
  • புதிய பாலம் கட்டுவதால், இருநாடுகளுக்கு இடையேயான பிராந்தியத் தொடர்புகள் அதிகரிக்கும். மேலும், இருநாடுகளுக்கு இடையே தொழில்துறை வளர்ச்சி, சமூக, கலாசார பரிமாற்றங்கள் மேலும் வலுவடைவதால், இருநாட்டு நல்லுறவு மேம்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்