நேபாளத்தின் இரண்டாவது இணையச் சேவை வழங்குநராக சீனா உருவெடுத்துள்ளது. இதன் மூலமாக இமாலய நாடான நேபாளத்தில் தற்போது இணையச் சேவையினை அளிக்கக்கூடிய இந்தியாவின் ஆதிக்கம் தடைபட்டுள்ளது.
இதுவரையில், இந்தியாவின் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மூலமாகத் தான், நேபாளம் சர்வதேச இணையப் பின்னலமைப்பினுள் இணைந்திருந்தது.
புதிய தரைவழி ஒளியிழைத் திட்டமானது 2016-ல் சீனா டெலிகாம் குளோபல் நிறுவனத்தால் தொடங்கப்பட்டது. இதுவே தற்போது நேபாளம் மற்றும் சீனாவை ஜிலோங் (ராசுவாகாதி) எல்லை வழியாக இணைத்துள்ளது.