நேபாளத்தின் முதலாவது செயற்கைக் கோளான “நேபாளிசாட்-1” ஆனது அமெரிக்காவில் உள்ள தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகத்தின் (National Aeronautics and Space Administration - NASA) ஏவு மையத்திலிருந்து விண்ணுக்கு ஏவப்பட்டது.
இந்தச் செயற்கைக் கோளானது நேபாள நாட்டைச் சேர்ந்த அபாஸ் மாஸ்கீ மற்றும் ஹரிராம் ஸ்ரேஸ்தா ஆகிய இரண்டு நபர்களால் ஜப்பானின் கியூசு தொழில்நுட்ப நிறுவனத்தில் வடிவமைக்கப்பட்டது.