TNPSC Thervupettagam

நேர முத்திரையிடல் மற்றும் நேர ஒத்திசைவு வலைப்பின்னல்

May 3 , 2018 2397 days 832 0
  • CSIR – NPL (தேசிய இயற்பியல் ஆய்வகம்) மற்றும் தொலைத் தொடர்புத்துறை ஆகியவை தேசிய அளவிலான நேர முத்திரையிடல் நேர ஒத்திசைவு வலைப்பின்னலை (Time Stamping and Time Synchronization Network - TSTSN) நிறுவுவதற்கும், தேசிய இயற்பியல் ஆய்வகத்தின் UTC (Coordinated Universal Time) நேரத்திற்கு நேர சமிக்ஞையை கண்டறிதல் ஆகியவற்றிற்காக தொழில்நுட்ப அறிவை பரிமாற்றுதல் மீதான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
  • தேதி மற்றும் நேரம் ஆகியவற்றை பதிவு செய்தல் என்பது ஒரு நிகழ்ச்சியின் நேர முத்திரையிடல் என குறிப்பிடப்படுகிறது.
  • இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வரைமுறைகளின் படி தொலைத் தொடர்புத்துறை நாடு முழுவதும் அமைக்கப்படும் நேர முத்திரையிடல் மற்றும் நேர ஒத்திசைவு வலைப்பின்னல் ஆனது CSIR – NPL -இன் (National Physical Laboratory) தொழில்நுட்ப உதவியோடு 22 நேர ஒத்திசைவு மையங்களைக் கொண்டிருக்கும்.
  • இந்தியா முழுவதும் உள்ள அனைத்து தொலைத் தொடர்பு மற்றும் இணைய சேவை வழங்குநர்களுக்கு இந்திய நேரத்தில் (IST) ஒத்திசைவு துடிப்பு அலைகளை (Synchronising Pulses) இந்த வலைப்பின்னல் வழங்கும்.
  • IST நேர முத்திரையுடன் தொலைத்தொடர்பு வலைப்பின்னலை ஒத்திசையச் செய்தலானது இணைய நிகழ்வுகளை தொடர்புபடுத்துதல் மற்றும் ஆராய்தல் ஆகியவற்றில் உள்ள கடினத் தன்மையை சரிசெய்வதற்கு பாதுகாப்பு நிறுவனங்களை இயலச் செய்வதோடு இணைய நெறிமுறை வழியிலான குரல் தொடர்பு (Voice over Internet Protocol – VOIP) துண்டிப்பை குறைப்பதன் மூலம் தொலைத்தொடர்பு வலைப்பின்னல் திறனளவை மேம்படுத்தும்.
  • CSIR – NPL ஆனது இந்திய நேரத்தை (IST) உருவாக்கல், நிர்வகித்தல் மற்றும் பரவச் செய்தல் ஆகியவற்றிற்கு பொறுப்புடைமையுடைய அமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்