உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான கொலீஜியம் குழுவானது மூத்த வழக்கறிஞரான இந்து மல்ஹோத்ராவை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க அவரது பெயரை ஒரு மனதாக பரிந்துரை செய்துள்ளது.
இதன் மூலம் இந்தியாவின் உச்ச நிலை நீதி அமைப்பான உச்சநீதிமன்றத்திற்கு அதன் நீதிபதியாக நேரடியாக நியமிக்கப்பட முன்னிறுத்தப்பட்டுள்ள இந்தியாவின் முதல் பெண் வழக்குரைஞர் இந்து மல்ஹோத்ராவே ஆவார்.
ஒட்டு மொத்த அளவில் அவர் உச்சநீதிமன்றத்தில் ஏழாவது பெண் நீதிபதியாவார்.
நீதிபதி – பாத்திமா பீவி உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாவார்.
தற்போது நடப்பில் மொத்தம் 25 நீதிபதிகளை கொண்டுள்ள உச்ச நீதிமன்றத்தில், நீதிபதி பானுமதி மட்டுமே உச்ச நீதிமன்றத்தின் பெண் நீதிபதியாக உள்ளார்.
சுதந்திரத்திற்கு பின்னான 67 ஆண்டுகால வரலாறுடைய உச்சநீதிமன்றம், இது வரை இரு முறை மட்டுமே இரு பெண் நீதிபதிகளை ஒரே நேரத்தில் பணியமர்த்தியுள்ளது.