TNPSC Thervupettagam

நேரடி நெல் விதைப்பு முறைக்கு ஊக்கத் தொகை

May 10 , 2022 804 days 354 0
  • பஞ்சாப் அரசானது, நேரடி நெல் விதைப்பு முறையைத் தேர்ந்தெடுக்கும் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்க உள்ளதாக சமீபத்தில் அறிவித்தது.
  • நேரடி நெல் விதைப்பு முறையில், நாற்றுகளை இடம் மாற்றி நடவு செய்யும் முறைக்குப் பதிலாக, விதைகள் நேரடியாக வயலில் விதைக்கப்படுகின்றன.
  • விதைகளை மண்ணில் விதைக்க டிராக்டரின் உதவியுடன் இயங்கும் இயந்திரம் பயன் படுத்தப் படுகிறது.
  • நாற்றங்கால் விதைப்பதற்கு நிலத்தினைத் தயார்படுத்த வேண்டியதன் அவசியம் இந்த முறையில் இல்லை.
  • நேரடி நெல் விதைப்பு முறையானது 15% முதல் 20% வரை தண்ணீரை சேமிக்க உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்