மத்திய அரசானது, உபரி வரிகள் போக 2024 ஆம் நிதியாண்டில் 19.58 டிரில்லியன் ரூபாய் நேரடி வரி வருவாயினை ஈட்டியுள்ளது.
இது 17.7% என்ற வருடாந்திர வளர்ச்சியைக் காட்டுகிறது என மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) கூறியுள்ளது.
உபரி வரிகள் போக, தனி நபர் வருமான வரி வருவாய் ஆனது 2024 ஆம் நிதியாண்டில் 10.44 டிரில்லியன் ரூபாயாக இருந்தது என்ற நிலையில் இது 25.23% என்ற அளவில் வருடாந்திர வளர்ச்சியினை காட்டுகிறது.
2024 ஆம் நிதியாண்டில் உபரி வரிகள் ஈடு செய்வதற்கு முன்னதாக மொத்த நேரடி வரி வசூல் 23.37 டிரில்லியன் ரூபாயாக இருந்தது.
அரசாங்கம் ஆனது முதலில் நிகர நேரடி வரி வருவாய் 18.23 டிரில்லியன் ரூபாய் ஆக இருக்கும் என மதிப்பிட்டிருந்தது. ஆனால் 2025 ஆம் நிதியாண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையில் அரசாங்கம் அதனை சுமார் 19.45 டிரில்லியன் டாலராக மறு மதிப்பீடு செய்தது.