மத்திய நேரடி வரிகள் வாரியம் சார்பாக நேரடி வரிகளை வசூலிக்க கரூர் வைஸ்யா வங்கிக்கு இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கி உள்ளது.
அனுமதி பெற்ற பிறகு, நேரடி வரிகளை வசூலிப்பதற்கு மத்திய நேரடி வரிகள் வாரியத்துடன் கரூர் வைஸ்யா வங்கி தனது ஒருங்கிணைப்புச் செயல்முறையைத் தொடங்கியது.
இந்த ஒருங்கிணைப்பானது தனது வாடிக்கையாளர்களை எந்தவொரு வங்கிக் கிளைகள்/இணைய வங்கி/ கைபேசி வங்கிச் சேவைகள் (Dlite கைபேசிச் செயலி) மூலம் நேரடி வரிகளைச் செலுத்த வழி வகுக்கும்.