இரண்டாவது அகில இந்திய நேரப் பயன்பாட்டு கணக்கெடுப்பு 2024 ஆனது, சமீபத்தில் புள்ளி விவரங்கள் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகத்தினால் வெளியிடப் பட்டு உள்ளது.
2024 ஆம் ஆண்டில் பெண்கள் ஊதியம் வழங்கப்படாத வீட்டு வேலைகளில் தங்கள் வீட்டு உறுப்பினர்களுக்காக ஒரு நாளில் செலவிடும் நேரம் 10 நிமிடங்கள் குறைந்து 289 நிமிடங்களாகக் குறைந்தது.
இது 2019 ஆம் ஆண்டில் 299 நிமிடங்களாக இருந்தது.
கடந்த ஆண்டு ஆண்களை விட பெண்கள் வீட்டு உறுப்பினர்களுக்கான ஊதியம் வழங்கப்படாத வீட்டு சேவைகளில் ஒரு நாளில் 201 நிமிடங்கள் அதிகமாகச் செலவிட்டு உள்ளனர்.
ஆண்களை விட பெண்கள் தம் வீட்டு உறுப்பினர்களுக்கான ஊதியம் வழங்கப்படாத பல பராமரிப்பு நடவடிக்கைகளில் ஒரு நாளில் 62 நிமிடங்கள் அதிகமாகச் செலவிட்டு உள்ளனர்.
15 முதல் 59 வயதுடைய பெண்கள் சுமார் 305 நிமிடங்கள் அதிக நேரம் செலவிட்டதால் ஊதியம் வழங்கப்படாத வீட்டு வேலைகளில் அவர்களின் பங்கு 2024 ஆம் ஆண்டில் அதிகமாகவே இருந்தது.
இருப்பினும், வேலை மற்றும் அது தொடர்புடைய நடவடிக்கைகளுக்கு என்று, ஆண்கள் பெண்களை விட சுமார் 132 நிமிடங்களை அதிகமாகச் செலவிட்டனர் (பெண்கள் 341 நிமிடங்கள், ஆண்கள் 473 நிமிடங்கள்).
இங்கு ஒட்டு மொத்தமாக, 2024 ஆம் ஆண்டில் ஒரு நாளில் சுமார் 83.9 சதவீதப் பெண்கள் ஊதியம் வழங்கப்படாத செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
இது 2019 ஆம் ஆண்டில் 84.0 சதவீதமாக இருந்த நிலைக்கு கிட்டத்தட்டச் சமம் ஆகும்.
ஊதியம் வழங்கப்படாதச் செயல்பாடுகளில், அவர்களின் பங்கு 2019 ஆம் ஆண்டில் 17.1 சதவீதத்திலிருந்து 2024 ஆம் ஆண்டில் 20.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.
ஊதியம் வழங்கப்படாதச் செயல்பாடுகளில் ஆண்களின் பங்கேற்பு விகிதம் 2019 ஆம் ஆண்டில் 43.9 சதவீதத்திலிருந்து 2024 ஆம் ஆண்டில் 45.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.
ஊதியம் வழங்கப்படாத வேலைகளில், அவர்களின் பங்கு 54.8 சதவீதத்திலிருந்து 60.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.
2024 ஆம் ஆண்டில் ஆண்கள் கற்றல் நடவடிக்கைகளில் 415 நிமிடங்கள் செலவிட்டனர் என்ற நிலையில் இது 2019 ஆம் ஆண்டில் பதிவான முந்தைய 426 நிமிடங்களிலிருந்து குறைவாகும்.
பெண்கள் 2024 ஆம் ஆண்டில் அத்தகையச் செயல்பாடுகளில் சுமார் 413 நிமிடங்கள் செலவிட்டனர் என்ற ஒரு நிலைமையில் இது 2019 ஆம் ஆண்டில் பதிவான சுமார் 423 நிமிடங்களிலிருந்து குறைந்துள்ளது.