2021 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் ரூ.50000க்கு மேல் பணம் செலுத்துவோர் புதிய காசோலை செலுத்தும் முறையான 'நேர்மறை செலுத்து முறை’ என்ற முறையைப் பின்பற்ற வேண்டும்.
எந்தவொரு மோசடி நடவடிக்கைகளுக்கும் எதிராக வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக காசோலை துண்டிப்பு முறைக்கான நேர்மறை செலுத்து முறையானது இந்திய ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப் பட்டுள்ளது.
இந்த முறையை உருவாக்கும் பொறுப்பு இந்தியத் தேசிய பணவழங்கீட்டுக் கழகத்திடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.
காசோலை பணவழங்கீடுகளில் நடைபெறும் மோசடிச் செயல்களைக் கண்டறியும் வசதி கொண்ட நேர்மறை செலுத்து முறை என்பது காசோலை துண்டிப்பு முறைமையின் (Cheque Truncation System) கீழ் உள்ள ஒரு கருவியாகும்.