மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் இருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்ப அழைக்க அமெரிக்க அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
கடந்த ஆண்டு 1,000 அமெரிக்க படையினர் கொண்ட படைப்பிரிவுகள் நைஜரில் இரண்டு தளங்களில் நிலை நிறுத்தப்பட்டன.
2018 ஆம் ஆண்டு முதல், சஹேல் பிராந்தியத்தில் உள்ள இஸ்லாமியப் போராளிகள் மற்றும் அல் கொய்தாவின் துணை அமைப்பான ஜமாத் நுஸ்ரத் அல்-இஸ்லாம் வால் முஸ்லிமீன் ஆகியவற்றைக் குறி வைத்து தாக்குவதற்காக என்று இந்த படைத் தளம் பயன்படுத்தப் பட்டது.
கடந்த ஆண்டு, நைஜரின் இராணுவம் ஒரு புரட்சி மூலம் அந்நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றியது.
ஆட்சிக் கவிழ்ப்பு வரை, அமெரிக்கா மற்றும் பிரான்சின் ஒரு முக்கிய பாதுகாப்பு பங்கு தாரராக நைஜர் இருந்தது.
புதிய அரசாங்கமானது, அண்டை நாடுகளான மாலி மற்றும் புர்கினா பாசோவைப் போலவே, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் போன்ற சில மேற்கத்திய நாடுகளுடனான இராணுவ உறவுகளைத் துண்டித்தன.
அவை ECOWAS எனப்படும் பிராந்தியப் பொருளாதாரக் கூட்டமைப்பிலிருந்தும் விலகி, ரஷ்யாவுடன் நெருக்கமான உறவுகளைத் தொடர்கின்றன.