TNPSC Thervupettagam

நைட் ஃபிராங்க் நிறுவனத்தின் செல்வ வளம் குறித்த அறிக்கை 2025

March 11 , 2025 20 days 61 0
  • தற்போது 85,698 என்ற உயர் நிகர சொத்து மதிப்புள்ள தனிநபர்கள் எண்ணிக்கையுடன் (HNWIs) உலகளவில் நான்காவது இடத்தைப் பிடித்து, ஒரு மிக முன்னணி உலகளாவிய செல்வ வளம் கொண்ட மையமாக இந்தியா உருவெடுத்துள்ளது.
  • இது அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பானுக்கு அடுத்தபடியாக உள்ளது.
  • குறைந்தபட்சமாக சுமார் 1 மில்லியன் டாலர் முதலீடு செய்யக்கூடிய சொத்துக்களைக் கொண்ட தனிநபர்கள் என வரையறுக்கப்படும் HNWI நபர்கள் எண்ணிக்கையானது 2024 ஆம் ஆண்டில் உலகளவில் 4.4% அதிகரித்துள்ளது.
  • குறிப்பிடத்தக்க வகையில், 100 மில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்துக்களைக் கொண்ட அதி உயர் நிகர சொத்து மதிப்புள்ள தனிநபர்களின் (UHNWIs) எண்ணிக்கை என்பது முதல் முறையாக 100,000 எண்ணிக்கையினைத் தாண்டியது.
  • 2024 ஆம் ஆண்டில், UHNWI எண்ணிக்கையில் சுமார் 5.2% அதிகரிப்புடன் அமெரிக்கா உலகிலேயே முன்னணியில் இருந்தது.
  • அதனைத் தொடர்ந்து, சுமார் 5% விகித அதிகரிப்புடன் ஆசியாவும், 4.7% அதிகரிப்புடன் ஆப்பிரிக்காவும் இடம் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்