நைட்ரஜன் மாசுபாடு மீதான ஒரு தொகுதியைக் கொண்டுள்ள 2019 ஆம் ஆண்டின் வருடாந்திர பிராண்டியர்ஸ் அறிக்கையானது ஐக்கிய நாடுகளினால் வெளியிடப்பட்டது.
இந்த அறிக்கையானது நைரோபியில் ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் சபையினால் (United Nations Environmental Assembly - UNEA) வெளியிடப்பட்டது.
இது கால்நடை, விவசாயம், போக்குவரத்து, தொழிற்சாலை மற்றும் ஆற்றல் துறையின் வளர்ந்து வரும் தேவையானது நமது சுற்றுச்சூழலில் எதிர்வினையாற்றும் நைட்ரஜன் அம்மோனியா, நைட்ரேட், நைட்ரிக் ஆக்சைடு (NO), நைட்ரஸ் ஆக்ஸைடு (N2O) ஆகியவற்றின் அதீத வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது என்றுக் கோடிட்டுக் காட்டியது.
உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, நைட்ரேட் கலக்கப்பட்ட குடிநீரானது இரத்தச் செயல்பாட்டைக் குறைத்தல், புற்றுநோய் மற்றும் முன்கழுத்துக் கழலை நோய் ஆகியவற்றை ஏற்படுத்தும்.