அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் 165 பேர் மரண தண்டனை விதிக்கப் பட்டு உள்ளதையடுத்து, முதல் முறையாக நைட்ரஜன் வாயு செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றம் எனப்படும் சோதிக்கப்படாத முறையில் மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.
1996 ஆம் ஆண்டில் இந்தக் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
நைட்ரஜன் வாயுவினைச் செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றம் என்பது ஒரு சுவாசக் கருவி வடிவிலான முகமூடியை அக்கைதியின் முகத்தில் வைத்து, சுவாசக் காற்றிற்குப் பதிலாக அவர்களுக்கு தூய நைட்ரஜன் வாயு செலுத்தப்படும் ஒரு முறை ஆகும்.
இது ஒருவரின் சுவாசத்தில் ஆக்ஸிஜன் இழப்பு ஏற்பட்டு, சில நொடிகளில் அவரது சுய நினைவை இழக்கச் செய்து, அடுத்த சில நிமிடங்களில் மரணத்தை ஏற்படுத்துகிறது.
விஷ ஊசி என்பது அமெரிக்காவில் பொதுவாக பயன்படுத்தப்படும் மரண தண்டனை ஆகும் என்பதோடு 1982 ஆம் ஆண்டில் ஒரு சோதனை மற்றும் "மிதமான" தண்டனை முறையாகவும் இது அறிமுகப்படுத்தப்பட்டது.
அமெரிக்காவில் கடைசியாக 1999 ஆம் ஆண்டில் ஹைட்ரஜன் சயனைடு வாயுவைப் பயன்படுத்தி மரண தண்டனை நிறைவேற்றப் பட்டது.